பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் டிஜிட்டல் வர்த்தகத்தில் இணையப் பாதுகாப்பு குறித்து தேசிய கருத்தரங்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, வணிகவியல் (கணினி பயன்பாடு) துறை சார்பில் “டிஜிட்டல் வர்த்தகத்தில் இணையப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் விக்டோரியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கேரள மாநிலம் கோதமங்கலம் மார் அதனாசியஸ் கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் டயானா ஆன் ஐசக், தஞ்சாவூர் இன்ஃபோசிஸ்டம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கருத்தரங்கில் 9 கல்லூரிகளைச் சேர்ந்த 514 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வணிகவியல் (கணினி பயன்பாடு) துறைத் தலைவர் கே. புனிதா தேவி ஒருங்கிணைத்தார்.