லிட்டில் ஸ்காலர்ஸ் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா
தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 22.08.2026 அன்று நடைபெற்றது. பள்ளித் தாளாளரும் முதல்வருமான நடனசிகாமணி வரவேற்றார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி மற்றும் A.V.V.M. ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் முதல்வரும் ரோட்டேரியனுமான முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினர். விழாவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். விழாவில் 1,800 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அக்னி, ஆரியபட்டா, பிரித்வி, சந்திரயான், மங்கள்யான் என ஐந்து அணிகளாகப் பிரிந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் தஞ்சாவூர் தெற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரோட்டேரியன் வாசன் உரையாற்றினார். சங்கச் செயலாளர் ரோட்டேரியன் சதீஷ் குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெற்றோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் மகேஸ்வரன், தினேஷ் குமார், பூங்கொடி, விஜய், கலைவாணி, ஜெயஹர் உசேன் போட்டிகளை நடத்தினர். தலைமையாசிரியைகள் கலாமாலினி, ராமதேவி, உதவி தலைமை ஆசிரியர்கள் ராமபிரபா, கவிதா, செல்வி, அங்கையற்கண்ணி, சரஸ்வதி, ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். தேவிகா சிவகாமணி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். துணை முதல்வர் சுவாமிநாதன் நன்றி தெரிவித்தார்.