Welcome To weekly News Paper Delta
ஆவணி அமாவாசை: தஞ்சை மூலை அனுமாருக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம்!
30 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (10-ம் தேதி) மூலை அனுமாருக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மூலை அனுமாரின் மணி கட்டிய வாலில் சனீஸ்வர பகவான் உள்ளிட்ட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். நாட்டில் பயிர்கள் செழித்து வளரவும், விவசாயம் வளம் பெறவும் வேண்டி, ஆவணி மாத அமாவாசை நாளில் மூலை அனுமாருக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. இன்றைய சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட மூலை அனுமாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

.