Welcome To weekly News Paper Delta
நீர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 26-ம் தேதி நடைபெறுகிறது
38 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 26.09.2026 அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்களின் அன்றாட மற்றும் குடிநீர் தேவைகளுக்கும், விவசாய பயன்பாட்டிற்கும் உரிய, குளங்கள், ஆறுகள் மற்றும் ஆற்றுணை நீர் ஆதாரங்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கோடை மற்றும் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுப்பது, மழைநீரை சேமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்காக நீர் ஆதாரங்களான நீர்நிலைகளை புனரமைத்தல், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துதல், நீர் சேமிப்பு மற்றும் நீர் சிக்கனம், மக்கள் இயக்கமாக மாற்றுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது. இக்கருத்தரங்கில் தன்னார்வலர்கள், கருத்தாளர்கள், ஆலோசனையாளர்கள், நீர் பாதுகாப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள் மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 9698940274 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து, தங்களது கருத்துகளைத் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். — தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்

.