தஞ்சையில் பெரியார் வாக்கத்தான்! திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தொடங்கி வைத்தார்
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், மாவட்ட மாநகர திராவிடர் கழகம் மற்றும் தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் பெரியார் 148-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் வாக்கத்தான் இன்று நடைபெற்றது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய வாக்கத்தானை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, உடல் நலமும் உள்ள நலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பெரியாரைப் பின்பற்றி நடந்தால் இறுதி வெற்றி நமக்கே என்றும் தெ