Welcome To weekly News Paper Delta
தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
40 Views

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலில், நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி பெருவிழா விடையாற்றி விழாவை முன்னிட்டு, மூலவர் வெள்ளைப் பிள்ளையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் அருகில் வல்லபை தேவியை அமர்ந்த கோலத்தில் தத்ரூபமாக வடிவமைத்து, வெள்ளைப் பிள்ளையார் வல்லபை சமேதராக பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். இந்தக் கோயிலின் ஐதீகப்படி, மூலவர் வெள்ளைப் பிள்ளையாருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் வல்லபை தேவியுடன் வெள்ளைப் பிள்ளையார் காட்சி அளித்தது அபூர்வமான திருக்கோலமாக பக்தர்களால் கருதப்பட்டது. மூலவர் அருகில் வல்லபை தேவியை அமர்ந்த கோலத்தில் தத்ரூபமாக அமைத்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சிப்படுத்திய விதம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த அற்புதக் காட்சியை காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர். மேலும், இத்திருக்கோயிலில் உற்சவர்களாக வல்லபை சமேத ஸ்ரீ வல்லப விநாயகர் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். விநாயகர் சதுர்த்தி பெருவிழா விடையாற்றி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் வல்லபை சமேத ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் என்கிற வல்லப விநாயகரை தரிசனம் செய்து வழிபட்ட

.