பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ‘ஐ.டி. ஸ்பார்க்’ கலைவிழா
தஞ்சாவூர்: பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, தொழில்நுட்பத் துறை சார்பில் ‘ஐ.டி. ஸ்பார்க்’ கலைவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் விக்டோரியா அம்மா தலைமை தாங்கினார். நடிகை நவீன ஆடை அலங்காரம் மற்றும் ஆதித்யா தொலைக்காட்சி நகைச்சுவை நடிகை அபர்ணா சுந்தரராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 12-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 384 மாணவ, மாணவிகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத தலா 4 நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த கோப்பையை திருச்சி ஜமால் முகமது கல்லூரி வென்றது. விழாவில் மாணவி அபித்தா வரவேற்புரையும், மாணவி அனுப்பிரியா நன்றியுரையும் வழங்கினர். தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் விழாவை ஒருங்கிணைத்தனர்.