Welcome To weekly News Paper Delta
34 Views

தஞ்சையில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற 8 கிலோமீட்டர் தூர ஆரோக்கிய நடைபயிற்சி 25வது மாதமாக நடைபெற்றது. இதில் பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டுத் திடல் நடைப்பயிற்சியாளர் சங்கம் சார்பில், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நடைபயிற்சியை சமூக செயல்பாட்டாளர் மற்றும் வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் எஸ். வாசுதேவன் தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அன்னை சத்யா விளையாட்டுத் திடலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு முட்டை, சுண்டல் உள்ளிட்ட ஆரோக்கிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டு உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என எஸ். வாசுதேவன் வலியுறுத்தினார். நிறைவில் சாமிநாதன் நன்றி தெரிவித்தார்.

.