Welcome To weekly News Paper Delta
குருவார குரு தரிசனம் – கோடி புண்ணியம்! தஞ்சாவூர் வடவாற்றங்கரை இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு வழிபாடு
24 Views

தஞ்சாவூர் வடவாற்றங்கரை இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு வழிபாடு தஞ்சாவூர், செப்.25: தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் அமைந்துள்ள இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில், நேற்று (24ம் தேதி) வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பிருந்தாவனத்தின் மீது நேரடியாக வெயிலும் மழையும் படும் வகையில் அமைந்துள்ள இந்த இடத்தில், பக்தர்கள் தொடர்ந்து 9 வியாழக்கிழமைகள் 9 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம், அட்சதை, மிருத்திகை, கற்கண்டு, துளசி, புஷ்பங்கள் மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. குருவாரமான வியாழக்கிழமை குரு தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

.