தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் “Tapestry Fest 2K26” நிறைவு விழா
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, சமூகத்துறை, ஆங்கிலத்துறை, வரலாற்றுத்துறை மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளை இணைந்து நடத்திய “Tapestry Fest 2K26” கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் Sr. Dr. விக்டோரியா தலைமையில் நடைபெற்ற விழாவில், அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனர் Rtn. Dr. A.R. சவரிமுத்து மற்றும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் Dr. V. உஷாநந்தினி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை ஒரத்தநாடு பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வென்றது. விழாவில் சமூகத்துறை தலைவர் Sr. Dr. டெல்பினா வரவேற்புரையும், ஆங்கிலத்துறை தலைவர் ஹேமாவதி நன்றியுரையும் வழங்கினர்.