விநாயகர் சதுர்த்தி விழா: தஞ்சையில் முன்னேற்பாடு கூட்டம்
தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி விழா-2026-ஐ முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நிறுவுதல், அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் நிறுவுதல், ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை அரசு விதிமுறைகளின்படி பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், விழா காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.