வங்கி சேவைகள் 5 நாட்கள் பாதிக்கப்படும்! செப். 26 முதல் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது!
செப். 28 முதல் 30 வரை நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (UFBU) சார்பில் செப். 28 முதல் 30 வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய செப். 26, 27 ஆகிய இரு நாட்களும் வார விடுமுறை என்பதால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை பணிகள் பாதிக்கப்படலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ❤️ Like • ???? Comment • ???? Share