Welcome To weekly News Paper Delta
தஞ்சை ஏ டு இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் சிறுநீரக மருத்துவ முகாம்
24 Views

தஞ்சாவூர்: தஞ்சை ஏ டு இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறுநீரக கல், சிறு நீர் பாதை தொற்று போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் சலுகை கட்டணத்தில் அளிக் கப்படுகிறது. முகாமில் சிறுநீரக கற்கள், சிறுநீர் கசிவு, புரோஸ்டேட் வீக்கம், சிறுநீர்ப்பை கற்கள், சிறுநீரில் ரத்தம், ஆண்மலட்டுத்தன்மை, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனையை சிறுநீரக மாற்று மற்றும் சிறுநீரக புற்றுநோய் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அனந்தகுமார் ஆலோசனை வழங்கினார். முகாம் 29-ந் தேதி (சனிக்கி ழமை) வரை நடக்கிறது. முகாமில் டாக்டரின் பரிந்துரையின் பேரில் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது. முழு உடல் பரிசோதனையும் சலுகை கட்டணத்தில் பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

.