முதலமைச்சர் கோப்பை – கூடைப்பந்து போட்டி மாவட்ட அளவிலான போட்டியில் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி முதலிடம்!
திருவாரூர்: சி. எம். டிராபி எனப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் உள்ள அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் இன்று திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.